You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெனிசுவேலாவின் 'மறைமுக கப்பல் படை' இயங்குவது எப்படி?
அமெரிக்கப் படைகள் புதன்கிழமை காலை வெனிசுவேலா கடற்கரையோரத்தில் ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் நிக்கோலாஸ் மதுரோ அரசாங்கத்தின் மீது அமெரிக்காவின் அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல் "இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது" என்று கூறினார்.
இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள மதுரோ அரசாங்கம், இது "வெளிப்படையான திருட்டு மற்றும் கடற்கொள்ளை" என்று வர்ணித்தது.
கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல், அமெரிக்காவின் எண்ணெய் தடைகளைத் தவிர்ப்பதற்காக வெனிசுவேலாவால் பயன்படுத்தப்படும் "மறைமுகக் கப்பல் படை" (Ghost fleet) என்று அழைக்கப்படும் கப்பல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் எவ்வாறு இயங்குகின்றன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு