You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமிகள் மாதவிடாய் காலத்திலும் பள்ளிக்கு வர உதவும் சோலார் பேக்
இது உங்களின் வழக்கமான பள்ளிக்கூட பை அல்ல. உகாண்டாவில் மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கப்படும் பொருட்கள் கிடைக்காமல் போவதைத் தடுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு சிறுமிகளுக்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த நிர்வாக திறன் இல்லாமல் வளர்ந்த ஜமீலாவுக்கு, தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக இத்தகைய பேக் (Bag) குறித்த யோசனை வந்துள்ளது. இந்த பேக் தேவைப்படும் மாணவிகளை சமூகத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அடையாளம் கண்டு, அதனை இலவசமாக வழங்குகின்றார்.
ஆப்பிரிக்காவில் பல சோலார் பேக் திட்டங்கள் உள்ளன. உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுமார் 12,000 பேக்குகளை ஜமீலா விநியோகித்துள்ளார். அதிகரித்து வரும் தேவையை சமாளிப்பதற்கான நிதிதான் இப்போதுள்ள சவால்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)