You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்த கிராமத்தின் ஆண்கள் அனைவருமே ‘வீட்டோடு மாப்பிள்ளைகள்’ ஏன் தெரியுமா? - காணொளி
பொதுவாக, இந்தியத் திருமண முறையில், திருமணமான பின் மணப்பெண் மணமகன் வீட்டுக்குச் செல்வதே வழக்கமாக இருந்து வருகிறது.
இன்றைய சூழலில், இந்த வழக்கத்தின் மீது பெண்ணியப் பார்வை சார்ந்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த வழக்கம் பழமையானது, மாறிவரும் இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றதல்ல என்ற பார்வைகளும் முன்வைக்கப் படுகின்றன.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள சிவகளை முடிவைத்தானேந்தல், புதூர், பொட்டலூரணி, செக்காரக்குடி உள்ளிட்ட 16 கிராமங்களில் ஒரு வித்தியாசமான பழக்கம் பின்பற்றப் படுகிறது.
திருமணம் முடிந்த கையோடு மணமகன் மணமகளின் மனைவியின் வீட்டில் குடியேறி விடுகின்றனர்.
இந்த முறை எப்படி சாத்தியமானது, இது அந்தப்பகுதியின் பெண்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, மற்ற ஊர்மக்கள் இதனை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம், அந்த ஊர் மக்களின் குரலிலேயே கேளுங்கள்…
ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
படத்தொகுப்பு: பி சாம் டேனியல், பிபிசி தமிழுக்காக
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)