மேற்கு வங்கம்: தேர்தலின்போது வன்முறை, குளத்தில் வீசப்பட்ட இவிஎம் இயந்திரங்கள்

மேற்கு வங்கம்: தேர்தலின்போது வன்முறை, குளத்தில் வீசப்பட்ட இவிஎம் இயந்திரங்கள்
பிரசுரிக்கப்பட்டது

நாடு முழுவதும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் தேர்தலின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

குல்டாலி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை உள்ளூர் கும்பல் ஒன்று சூரையாடியது. வாக்குப்பதிவு இயந்திர, விவிபேட் ஆகியவற்றை அவர்கள் குளத்தில் வீசினர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் புதிய இயந்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பல இடங்களில் பாஜக – திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)