ஜல்லிக்கட்டு - 10 காளைகளை ஒரே இடத்தில் வளர்க்கும் காளையர்கள்
ஜல்லிக்கட்டு - 10 காளைகளை ஒரே இடத்தில் வளர்க்கும் காளையர்கள்
பிரசுரிக்கப்பட்டது
10 காளைகளை ஒரே இடத்தில் வளர்த்து அசத்தி வருகின்றனர் மதுரை இளைஞர்கள் நாட்டு இன மாடுகளைப் பேணி காக்கவும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தைப் பறைசாற்றவும் பொதும்பு கிராமத்து இளைஞர்கள் குழுவாக இணைந்து கடந்த 8 ஆண்டுகளாகக் காளைகளைப் பராமரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்காக 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து 10 காளைகளைப் பராமரித்து வருகின்றனர். நாட்டு இன மாடுகளைப் பேணி காக்கவும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தைப் பறைசாற்றவும் பொதும்பு கிராமத்து இளைஞர்கள் குழுவாக இணைந்து கடந்த 8 ஆண்டுகளாகக் காளைகளைப் பராமரித்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் குழுவில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், கல்லூரி இளைஞர்களும் இருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



