'யாத்திசை' படத்தில் வரும் ரணதீர பாண்டியன் யார்? - காணொளி

காணொளிக் குறிப்பு, 'யாத்திசை' படத்தில் வரும் ரணதீர பாண்டியன் யார்?
'யாத்திசை' படத்தில் வரும் ரணதீர பாண்டியன் யார்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

யாத்திசை' ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ரணதீர பாண்டியன் என்பவர் யார்? பாண்டிய வரலாற்றில் இவரது முக்கியத்துவம் என்ன?

தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள 'யாத்திசை' திரைப்படம் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது. சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை இதுதான்: ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த ரணதீர பாண்டியனின் காலம். சேரர், சோழர் என அனைவரையும் வென்று பெரும் நிலப்பரப்பு அவன் வசம் இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரமாக வாழ விரும்பும் எயினர் என்ற சிறு குடியினர், ரணதீர பாண்டியன் பிடித்துவைத்துள்ள சோழர் கோட்டை ஒன்றை மீட்க முயல்கின்றனர். அது நடக்கிறதா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கள காட்சிகளும் அந்த காலகட்டத்திற்கே உரிய ஆடை வடிவமைப்பும் மிக உக்கிரமான சண்டைகளும் இந்தப் படம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ரணதீர பாண்டியனைப் பற்றிய ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.

இவரைப் பற்றிய காணொளி

யாத்திசை

பட மூலாதாரம், TWITTER@YAATHISAI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: