You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளைக் கொடியேந்தி வந்த பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது ஏன்? - காணொளி
காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலின் போது இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது.
உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது.
கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)