துபாயில் மதுபானத்துக்கு 30 சதவீத வரி ரத்து - குதூகலிக்கும் சுற்றுலாவாசிகள் (காணொளி)
மது மீதான 30% நகராட்சி வரியை நீக்க துபாய் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 1 முதல் துபாயில் உள்ள எல்லா 21 MMI கடைகளிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மரிடைம் & மெர்கன்டைல் இன்டர்நேஷனல் (எம்எம்ஐ) மற்றும் எமிரேட்ஸ் லீஷர் ரீடெய்ல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிரோன் ரெட் தெரிவித்தார்.
துபாயில் அரசு ஆதரவு பெற்ற இரண்டு மதுபான சில்லறை விற்பனையாளர்கள் புத்தாண்டு தினத்தன்று திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஏபி செய்தி முகமை எழுதியுள்ளது.
ஆனால் இது போன்ற அறிவிப்புகள் அரசு உத்தரவின் பேரில் வெளியிடப்படுகின்றன. அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக முடிவை உறுதிப்படுத்தவில்லை மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ஏபி செய்தி முகமை கூறுகிறது.

ஆனால் துபாயில் மது தொடர்பான விதிகள் காலப்போக்கில் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. துபாயில் இப்போது ரம்ஜான் காலத்திலும் மதுபானம் கிடைக்கிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் வீடுகளுக்கு வந்து வழங்கும் ஹோம் டெலிவரியும் செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



