பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு குடும்பம் பற்றிய புரிதல் கிடையாது - ராகுல்காந்தி சாடல்

காணொளிக் குறிப்பு, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு குடும்பம் பற்றிய புரிதல் கிடையாது - ராகுல்காந்தி சாடல்
பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு குடும்பம் பற்றிய புரிதல் கிடையாது - ராகுல்காந்தி சாடல்
பிரசுரிக்கப்பட்டது

பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் குடும்பம் பற்றிய புரிதல் கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சாடியுள்ளார்.

தகுதி நீக்க ரத்துக்குப் பிறகு தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதியில் முதன்முறையாக மக்களை அவர் சந்தித்தார்.

"இந்தியா என்பது குடும்பம். இந்த குடும்பத்தை பிளவுபடுத்த பாஜக நினைக்கிறது. மணிப்பூரை பிரித்து அழித்து விட்டதாக பாஜக எண்ணுகிறது. ஆனால் நாங்கள் மணிப்பூரை நாங்கள் ஒன்றுபடுத்துவோம். மணிப்பூரை எரிக்க உங்களுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. அங்கு ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால் நாங்கள் அதை செய்துகாட்டுவோம். இது பாஜக – காங்கிரஸ்க்கு இடையிலான யுத்தம்" என்று அவர் பேசினார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் சாடல்

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: