யுக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 34 பேர் பலி - டிரம்ப் கூறியது என்ன?

யுக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 34 பேர் பலி - டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவின் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் யுக்ரேனின் சுமி நகரைத் தாக்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 117 பேர் காயமடைந்ததாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியின் கோரக் காட்சிகள்.

இந்த ஆண்டு யுக்ரேனில் நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலாக இது உள்ளது.

"சாதாரண மக்களின் உயிர்களை அபகரிக்கும் இதுபோன்ற செயலை முட்டாள்களால் மட்டுமே செய்ய முடியும்" என யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான எதிர்வினையாற்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக நாடுகளுக்கு ஸெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தனர். இது மிகவும் கொடூரமானது என இந்த தாக்குதல் பற்றிய கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார்.

மேலும் டிரம்ப் பேசியது என்ன? கூடுதல் விவரங்கள் காணொளியில்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு