நிலவை யாராவது சொந்தமாக்க முடியுமா? சட்டங்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, நிலவை யாராவது சொந்தமாக்க முடியுமா? சட்டங்கள் கூறுவது என்ன?
நிலவை யாராவது சொந்தமாக்க முடியுமா? சட்டங்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை எல்லாம் நிலவில் தங்களின் ஆராய்ச்சி கருவிகளை அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஒரு நாடு அல்லது ஒரு தனிநபர் நிலவை சொந்தமாக்க முடியுமா?

உண்மையில் இதற்கான சட்டங்கள் உள்ளன.

அந்த சட்டங்கள் பெரும்பாலும் 1967-இல் கையெழுத்தான 'அவுட்டர் ஸ்பேஸ் ட்ரீட்டி' (Outer Space Treaty) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. ஐநாவில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த விண்வெளிக்கும் பொருந்தும்.

இந்த ஒப்பந்தம், நாடுகள் நிலவில் தங்களின் தளங்களை அமைக்கலாம் மற்றும் அங்கே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம் என கூறுகிறது.

ஆனால் இதன்படி நிலவில் நிலப்பகுதியை சொந்தமாக்க முடியாது. நாடுகள் தங்களுடைய தளத்தை அமைக்கும் இடத்தை கூட சொந்தமாக்க முடியாது.

ஆனால் அவுட்டர் ஸ்பேஸ் ட்ரீட்டி கையெழுத்தானதில் இருந்து பல விஷயங்கள் மாறியுள்ளன.

இப்போது பல நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் விண்வெளிக்குள் செல்ல முயற்சி செய்கின்றன.

நிலவிலும், விண்மீன்களில் மிதக்கும் உலோகங்கள் போன்ற வளங்கள் டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ளவையாக உள்ளன.

அதனால், அமெரிக்கா தலைமையிலான ஒரு நாடுகள் குழு ஆர்டெமிஸ் ஒப்பந்தம் (Artemis Accords) என்ற ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இது விண்வெளியில் ஒரு பகுதியை சொந்தமாக்கிக்கொள்வது குறித்த விரிவான விவரங்களை வழங்குகிறது.

ஆனால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கிறது எனக் கூறி, தங்கள் சொந்த விதிகளை உருவாக்க முயற்சி செய்கின்றன.

அதனால், நாடுகளுக்கு இடையே பூமியில் நிலவும் போட்டிகள் இப்போது விண்வெளியிலும் தொடரவிருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு