வானம் நீல நிறத்தில் இருக்க காரணம் என்ன?
வானம் ஏன் எப்போதும் நீல நில நிறத்தில் இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்ததுண்டா?
பகலில் இளம் வெளிர் நீல நிறத்தில் இருக்கும் வானம், மாலையைத் தொடும் போது சிவப்பு நிறத்திலும் இருப்பது ஏன்? இது குறித்து அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் டிண்டால் செய்த ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுவது என்ன?
வளிமண்டலத்தில் உள்ள சின்ன சின்ன துகள்கள் மூலமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படும்போது வரும் ஒளியைப் பொறுத்துதான் வானத்தின் நிறம் இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
இந்த செயல்பாடுதான் Tyndall Effect என்று அழைக்கப்படுகிறது.
நாசாவின் தகவல்களின்படி, சூரிய ஒளியில் VIBGYOR என்று சொல்லப்படும் வானவிலின் 7 நிறங்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அலை நீளம் இருக்கிறது. குறைவான அலை நீளம் கொண்ட நிறம் அதிகமாகவும், அதிக அலை நீளம் கொண்ட நிறம் குறைவாகவும் சிதறி அடிக்கப்படும்.
நீல நிறத்திற்கான அலை நீளம் சிறிய அளவில் பயணிப்பதால், மற்ற நிறங்களை விட நீல நிறம் அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. இதனால தான் வானம் பகலில் நீல நிறத்தில் இருக்கிறது. இது தொடர்பான மேலும் பல தகவல்கள் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



