You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆன போது, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப்பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட அமர்ந்த நரிக்குறவ பெண்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'அரசாங்க கோவில்ல ஒன்னா உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா?' என அவர்கள் பேசும் காணொளி வைரலானது.
அரசின் மீதான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால், நரிக்குறவ பெண் அஸ்வினியின் வீட்டுக்கு அதே ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வருகை தந்தார்.
நரிக்குறவ மக்களின் வீடுகளில் தேநீர் அருந்தியதோடு, 283 பேருக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
'வீடில்லாத மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வேண்டும்' என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
ஆனால், ''போதிய அளவு வீடுகள் கட்டித்தரப்படவில்லை, அவ்வாறு கட்டப்பட்ட சில வீடுகளும் கதவுகள் இல்லாமல், மழை வந்தால் நீர் கசியும் கூரையுடன் பெயரளவுக்கு கட்டப்பட்டுள்ளது'' என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மாமல்லபுரம் நரிக்குறவர் மக்களின் வாழ்நிலை எப்படி உள்ளது?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)