டெக்சாஸில் திடீரென வெள்ளம் அதிகரித்த தருணம்

டெக்சாஸில் திடீரென வெள்ளம் அதிகரித்த தருணம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 41 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதில் பெரும்பாலானான இறப்புகள் கெர் கவுன்டி ஆற்றங்கரையிலிருந்த பெண்கள் கிறிஸ்தவ முகாமில் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய இந்த முகாமிலிருந்த பல சிறுமிகள் இறந்துள்ளனர் மற்றும் காணாமல்போய் உள்ளனர்.

மக்கள் தேடப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக இறப்பு எண்ணிக்கையும் மிக வேகமாக மாறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இன்னும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்சாஸில் திடீரென வெள்ளம் அதிகரித்த தருணத்தை இந்த காணொளி காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு