காஸாவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் - இஸ்ரேல் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
ஹமாஸுக்கு எதிரான போரில் காஸாவில் அணு ஆயுதங்களை உபயோகிக்கலாம் என அதி தீவிர வலதுசாரி கட்சி ஒன்றை சேர்ந்த இஸ்ரேலின் மரபு செல்வங்கள் அமைச்சர் எலியாஹு கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் வானொலி நேர்காணலில், ஹமாஸுக்கு எதிராக காஸாவில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதும் ஒரு வழியாக இருக்குமா என்ற கேள்விக்கு ஆம், அதுவும் ஒரு வழியே என்று கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்து சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு, இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதற்கான சான்று என தங்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் அரசு அமைச்சரின் கருத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளது. அமைச்சர் எலியாஹூ இஸ்ரேலின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இல்லை என்று தெரிவித்ததுடன் அவரை அமைச்சரவையில் இருந்தும் நீக்கியுள்ளது.
அமைச்சர் எலியாஹு தான் கூறிய கருத்து ஒரு உருவகம் மட்டுமே என்றார். காஸா மீதான தாக்குதலில் அணுஆயுதங்களை

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



