பிரேசில் நதிக்கு ஏன் இந்த கதி? நுரை பொங்க காட்சியளிக்க என்ன காரணம்?

பிரேசில் நதிக்கு ஏன் இந்த கதி? நுரை பொங்க காட்சியளிக்க என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

பிரேசிலில் உள்ள ரியோ சிகோ நதி தற்போது நுரை பொங்க காட்சியளிக்கிறது. தெற்கு பிரேசிலில் உள்ள ஜான்வில் என்னும் இடத்தில் இந்த நதி இவ்வாறு காட்சியளிக்கிறது.

துணி துவைக்கப் பயன்படும் சோப்புத் தூளில் கலக்கப்படும் சல்பூனிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற வாகனம் கடந்த மாதம் 29ஆம் தேதி இந்த நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனால் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நதியில் உடலுக்கு ஆபத்தான சல்பூனிக் அமிலம் கலந்துள்ளதால் பெரும் சுகாதார ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நீர் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)