You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் 78 பேர் உயிரிழப்பு
ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் 78 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான காட்சிகள் Al Masirah தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பட்டுள்ளது.
நன்கொடையை பெற நூற்றுக்கணக்கான நபர்கள் பள்ளியில் குவிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்