You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் மூளுமா? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
சனிக்கிழமையன்று மஜ்தால் ஷாம்ஸ் நகரில் கால்பந்து மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லபனானில் உள்ள ஹெசபுல்லா கட்டுப்பாட்டு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று என்ன நடந்தது?
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் பகுதிகளில்
கால்பாந்து மைதானன் ஒன்றில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பினர் ஏவிய ராக்கெட் ட்ரூஸ் நகரின் மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் விழுந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்திருந்தது
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஹெசபுல்லா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்கு பதலடி கொடுக்கும் நடவடிக்கையாக லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
முன்னதாக ஹெசபுல்லா இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இதற்கான கடுமையான விளைவை நிச்சயம் சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் லபனானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்தல்லா போ ஹபிப், எசபுல்லா இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்த அவர், இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் கோலன் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் எசபுல்லா அமைப்பால் நடத்தப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்லின்கண் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)