பொம்மலாட்ட பொம்மைகளை போல ஊசலாடுகிறதா இந்தக் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை? - காணொளி

பொம்மலாட்ட பொம்மைகளை போல ஊசலாடுகிறதா இந்தக் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தானில் பொம்மலாட்ட பொம்மைகள் செய்பவர்கள் நலிந்து வருகின்றனர்.

பொம்மலாட்டம் அதிக இடங்களில் தற்போது நடத்தப்படாததால், பொம்மை செய்பவரகள் பலர் அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலையில் உள்ளனர். விலைவாசி உயர்ந்தாலும், பொம்மைகளின் விலை தேக்கமடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கத்புட்லி என்ற கிராமத்தில் உள்ள வீடுகளில் பெண்கள் இந்த பொம்மைகளை செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்தும் கூட, தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர்.

பொம்மலாட்டம் நடத்தும் ஆண்கள் பொம்மைகளையும் செய்கின்றனர். இதற்கு முந்தைய தலைமுறையினர் மஹாபாரதம் உள்ளிட்ட பல புராணக் கதைகள் 52 பொம்மைகள் கொண்டு நிகழ்த்தி வந்தனர். ஆனால் இப்போது பிறந்தநாள் விழாக்களிலே இந்த பொம்மலாட்டம் நடைபெறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)