பிகார்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை

காணொளிக் குறிப்பு, பிகாரில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக லாரி டிரைவர் கும்பல் படுகொலை
பிகார்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை
பிரசுரிக்கப்பட்டது

பிகாரில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக 55 வயதான லாரி டிரைவர் ஜஹீருதீன் கும்பல் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கும்பல் சூழத் தொடங்கியதும், உடனிருந்தவர்கள் ஓடிவிட மாற்றுத் திறனாளியான அவரால் ஓட முடியவில்லை.

லாரியைப் பார்க்கும்போது, சம்பவத்தன்று என்ன நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்க முடிந்தது. ஓட்டுநரின் இருக்கையிலும், அருகிலிருக்கும் இருக்கையிலும் கற்கள் கிடந்தன.

20-25 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், 7 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை கூறுகிறது.

எனினும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.

பிகாரில் லாரி டிரைவர் கும்பல் படுகொலை
படக்குறிப்பு, லைலா காதூன், ஜஹீருதீனின் தாயார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: