திருச்சி: நடைபாதையில் உறங்கியவர்கள் மீது ஏறிய கார் - 3 பேர் மரணம்

திருச்சி: நடைபாதையில் உறங்கியவர்கள் மீது ஏறிய கார் - 3 பேர் மரணம்
பிரசுரிக்கப்பட்டது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

சாலையோர நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் மீது அந்த கார் ஏறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி, மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் காரை தாறுமாறாக ஓட்டியதால் இந்த விபரீதம் நடந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரின் முன்பக்க டயர் வெடித்ததல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது தெரிய வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: