இங்கிலாந்தின் இந்த ஜூஸ் கடை ரொம்ப ஸ்பெஷல் – ஏன் தெரியுமா? – வீடியோ

காணொளிக் குறிப்பு, இங்கிலாந்தின் இந்த ஜூஸ் கடை ரொம்ப ஸ்பெஷல் – ஏன் தெரியுமா? – வீடியோ
இங்கிலாந்தின் இந்த ஜூஸ் கடை ரொம்ப ஸ்பெஷல் – ஏன் தெரியுமா? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

தென்மேற்கு இங்கிலாந்தில் வசிக்கும் பேட்ரிக்கும் அவரது தாய் ஜோனும் ஒரு புதிய ஜூஸ் கடையைத் துவங்கியுள்ளனர்.

ஆனால் இது மற்ற கடைகளைப் போலல்ல.

காரணம், இக்கடையின் அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் பேட்ரிக் தீவிர ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்.

இது பேட்ரிக்குக்கு மற்றவர்களோடு பழகும் திறனை வளர்க்கும் என்று அவரது தாய் ஜோன் நம்புகிறார்.

இப்போது தாயும் மகனும் பிரபலமான ஒரு ‘eco-friendly’ கடையை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள் ஜோனின் தொழிலை ஆதரிக்கின்றனர்.

இதன்மூலம் பேட்ரிக்கின் திறன் அதிகரிப்பது மட்டுமல்ல, இதுபோன்ற மற்ற குடும்பங்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்கிறார் ஜோன்.

ஆட்டிசம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: