காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் மிகப்பெரிய தவறாகிவிடும் - ஜோ பைடன் பேட்டி

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் மிகப்பெரிய தவறாகிவிடும் - ஜோ பைடன் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரிய தவறாகும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதுடன் விமானந்தாங்கி கப்பல்கள் இரண்டையும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஹமாஸை ஒழிக்க வேண்டும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என கூறிய அவர், அதே நேரம் ஹமாஸ் குழுவை பாலத்தீனர்களின் குரலாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிகா செய்யும் என உறுதியளித்த ஜோ பைடன், இஸ்ரேல் போர் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என நம்புவதாக தெரிவித்தார். குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)