You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீனம்: இஸ்ரேல் உருவாவதை ஆதரிக்காத நேரு பின்னர் அந்நாட்டை அங்கீகரித்தது ஏன்?
பாலத்தீனத்தை பிரிப்பது குறித்த வாக்கெடுப்பில், பிரிவினைக்கு எதிராக வாக்களிக்கும்படி ஐ.நாவுக்கான பிரதிநிதியிடம் நேரு தெரிவித்தார். நவம்பர் 28ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாக 33 வாக்குகளும், 13 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. இந்தியா எதிராக வாக்களித்தது.
ஆனால், 1950 நவம்பரில் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்தது. ஆனால், இந்த அங்கீகாரம் என்பது ஒப்புதல் அல்ல என்று குறிப்பிட்டார் நேரு. இதற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த நிலைப்பாடே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.
1974ல் பாலத்தீன விடுதலை இயக்கத்தை பாலத்தீன மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக அங்கீகரித்தது இந்தியா. அரபு நாடுகளைத் தவிர்த்து, இந்த அங்கீகாரத்தை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். 1988இல் இந்தியா பாலத்தீன நாட்டை அங்கீகரித்தது. 1996ல் காஸாவில் இந்தியப் பிரதிநிதியின் அலுவலகம் திறக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)