You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயதுல்லா அலி காமனெயி: இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் குறித்து பேசியது என்ன?
இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தலைமை தாங்கி உரை ஆற்றியதை கேட்பதற்கு கூடிய கூட்டம் தான் இது.
ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது.
முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து காமனெயி இரானில் ரகசிய இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தலைநகர் டெஹ்ரானில் காமனெயி இவ்வாறு பெருங்கூட்டத்திற்கு முன்பு உரை நிகழ்த்தியுள்ளார்.
இஸ்ரேல் மீதான இரானின் பதில் தாக்குதல் சரியானது, தர்க்க ரீதியானது மற்றும் சட்டப்பூர்வமானது என்று காமனெயி தெரிவித்தார்
மேலும் இரானின் பதில் தாக்குதல், இஸ்ரேலின் மோசமான குற்றங்களுக்கு குறைந்தபட்ச அளவிலான தண்டனை மட்டுமே எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இரானின் உச்சபட்ச அதிகாரமிக்க தலைவராக காமனெயி இருந்தாலும் அவர் அரிதாகவே வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தலைமை தாங்குகிறார்.
இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டு இரான் புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) ஜெனரல் காசிம் சுலேமானியை அமெரிக்கா கொன்றபோது அயதுல்லா அலி காமனெயி வெள்ளிக்கிழமை தொழுகையில் உரையாற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)