You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெக்டொனால்ட் கடையில் பிரெஞ்சு பிரைஸ் தயாரித்த டிரம்ப் - காணொளி
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது. முழுவீச்சில் இருவரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்ப் பிலடெல்பியாவில் உள்ள மெக் டொனால்ட்ஸ் கடையில் வேலை பார்த்தார்.
கமலா ஹாரிஸ் 1983-ஆம் ஆண்டு மெக் டொனால்ட்ஸில் வேலை பார்த்ததாக அவரது பிரச்சார குழு கூறுகிறது.
இதனையடுத்து, டொனால்ட் டிரம்பும் மெக் டொனால்ட்ஸில் வேலை செய்துள்ளார்.
கமலா ஹாரிஸ் மெக் டொனால்ட்ஸில் வேலையே பார்க்கவில்லை என டொனால்ட் டிரம்ப் கூறுவதுதான் பொய் என்று கமலா ஹாரிஸின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)