You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து: வைரலாகி வரும் நீர் யானை குட்டி - ஏன் தெரியுமா?
தாய்லாந்தில் உள்ள இந்த குட்டி நீர்யானை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரண்டு மாத குட்டி பெண் நீர்யானைக்கு மூ டெங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்க்க பட்டாயாவுக்கு அருகே உள்ள உயிரியல் பூங்காவில் மக்கள் திரள்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இந்த குடடி பிறந்தது முதல் பார்வையாளர்கள் வருகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக காவ் கேவோவ் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறுகிறது. பிக்மி ஹிப்போ நீர் யானை மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பிக்மி ஹிப்போவை அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது. காடுகளில் மூவாயிரத்திற்கும் குறைவாகவே பிக்மி ஹிப்போக்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)