மும்பை இந்தியன்சை சிஎஸ்கே வீழ்த்தியது குறித்து ரசிகர்கள் கூறியது என்ன? - காணொளி
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.
மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்த இந்த ஆட்டத்தில் எளிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை மும்பை அணி தள்ளிப்போட்டது.
சிஎஸ்கே கையில் எடுத்த அதே ஆயுதத்தை மும்பை இந்தியன்ஸும் எடுத்து கடைசிவரை போராடியது. சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருப்பதைப் போல், மும்பை இந்தியன்ஸில் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர்.
இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அவர் தனது மந்திர சுழலால் சென்னை அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.
இந்த போட்டி குறித்து சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை கான வந்த ரசிகர்கள் கூறுவதென்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



