ஜி 20 மாநாடு: சீன ஊடகங்களின் கணிப்பு என்ன?
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் தனது கட்டுரையில், ஜி-20 மாநாடு வளர்ந்து வரும் வேறுபாடுகளுக்கு மத்தியில் அடிப்படை ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று கூறியுள்ளது.
"டெல்லியில் நடந்துமுடிந்த ஜி-20 உச்சிமாநாடு இறுதியாக கூட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதில் யுக்ரேன்போர் தொடர்பாக மிகவும் அடிப்படையான ஒற்றுமை மற்றும் நடுநிலை அணுகுமுறை காணப்படுகிறது,” என்று குளோபல் டைம்ஸ் எழுதியது.
"ஜி-20, உலகளாவிய நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான பல்முனை மேடை என்று சீன ஆய்வாளர்கள் இப்போதும் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்தக்குழு, பெரும் சக்திகளுக்கு இடையிலான சிக்கலான மோதல்களால் செயலிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது," என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிடுகிறது.
மாநாட்டில் பங்கேற்க வந்த சீனப் பிரதமர் லி சியாங்கின் அறிக்கையையும் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், NARENDRAMODI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



