ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஹுசைனை கரம் பிடிக்கும் செளதி பெண் - விவாதம் ஆவது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஹுசைனை கரம் பிடிக்கும் செளதி பெண் - விவாதம் ஆவது ஏன்?
ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஹுசைனை கரம் பிடிக்கும் செளதி பெண் - விவாதம் ஆவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் இரண்டாம் ஹுசைன் பின் அப்துல்லாவுக்கும், செளதி கட்டிடக் கலைஞர் ரஸ்வா அல் சைஃப்புக்கும் இடையே ஜூன் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

ஜோர்டான் பட்டத்து இளவரசர் ஹுசைனை கரம் பிடிக்கும் செளதி பெண் - விவாதம் ஆவது ஏன்?

ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்று வரும் பாரம்பரிய கொண்டாட்டங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது, இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் அரச திருமண கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: