காஸா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ - ஆய்வில் வெளியான உண்மைகள் என்ன? - காணொளி

காஸா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ - ஆய்வில் வெளியான உண்மைகள் என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

காஸாவின் நாசர் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இஸ்ரேலிய படை சோதனை நடத்தியது.

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்கள் அங்கு அடைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையை தளமாக கொண்டு ஹமாஸ் செயல்படுவதாகவும் இஸ்ரேல் படைகள் கூறின.

ஆனால் தமது போராளிகள் யாரும் மருத்துவமனைகளில் இருந்து செயல்படுவதில்லை என ஹமாஸ் மறுத்திருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 16-ஆம் தேதி மருத்துவமனையில் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ பிபிசிக்கு கிடைத்தது.

பிபிசியின் நாசர் மருத்துவமனை விவகாரம் தொடர்பான இந்த செய்தி மிகவும் கவலைதரக்கூடியதாக இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரான் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை தேவை என பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பதை இந்தக் காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)