மார்க் ஆண்டனி விமர்சனம்: எஸ்.ஜே.சூர்யா- விஷால் கூட்டணி எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, மார்க் ஆண்டனி விமர்சனம்: எஸ்.ஜே.சூர்யா- விஷால் கூட்டணி எப்படி இருக்கிறது?
மார்க் ஆண்டனி விமர்சனம்: எஸ்.ஜே.சூர்யா- விஷால் கூட்டணி எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அந்தத் திரைப்படம் வணிகரீதியாக ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு வெளியான ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ திரைப்படம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சறுக்கல்தான்.

தற்போது அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகியுள்ளது. விஷாலுக்கும் சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படி வெற்றிப் படங்கள் அமையாத நிலையில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனியில் இவர்கள் கூட்டணி மாஸ் காட்டியுள்ளதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: