பொன்னியின் செல்வன்: பிரபலங்கள் வெளியிட்ட ரகசியங்கள்
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஆடியோ , டிரைலர் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மணிரத்னம் மற்று பொன்னியின் செல்வன் தொடர்பாக பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
"நல்ல படங்களை எடுப்பது நம் கடமை. என்னிடம் எப்படி வேலைக்குச் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் வேலைக்குச் சென்றே வெகுநாட்களாகிவிட்டது என்றேன். எனக்குப் பிடித்ததைச் செய்ய சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியாததன் மூலம், நல்ல கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு போய்விட்டது. மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்றார் கமல்.
மேலும், "இது பொறாமைப்படுவதற்கான நேரமில்லை. எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பதற்கான நேரம். இதுபோல படம் எடுக்கத் தைரியம் வேண்டும். மணிரத்னம் நின்று அடித்திருக்கிறார். யாராவது சற்றுப் பிழையாகச் செய்திருந்தாலும் கனவு கலைந்திருக்கும். இது சோழர்களின் பொற்காலம் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் பொற்காலம்" என்றார் அவர்.
பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீடு விழா சென்னையில் புதனன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, `பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக எடுக்க எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஆசை. ஒரு முறை நான், கமல், ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். சொன்னார். கமல்தான் வந்தியத்தேவன் என்றார். நல்லவேளை அது நடக்கவில்லை. நான் சொதப்பியிருப்பேன்" என்றார்.
முன்னதாக பொன்னியின் செல்வம் 1 பாகத்தின் ஆடியோ, டிரையல் வெளியிட்டு விழாவில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனான தானும், அருள்மொழி வர்மனாக கமலும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிவாஜி கூறியிருந்ததாக தெரிவித்தார். மேலும் தகவலுக்கு காணொளியை பார்க்கவும்.

பட மூலாதாரம், Lyca Productions
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



