பஞ்சாப்: பெற்றோர் கைவிட்ட குழந்தையை தத்தெடுத்த அமெரிக்க தம்பதி

பஞ்சாப்: பெற்றோர் கைவிட்ட குழந்தையை தத்தெடுத்த அமெரிக்க தம்பதி
பிரசுரிக்கப்பட்டது

மூன்று வயதாகும் ஏஞ்சல் பஞ்சாபின் கபுர்தலா ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டவர். ஆனால் தற்போது அவருக்கு புதிய வீடு கிடைத்திருக்கிறது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜலந்தரில் உள்ள நரி நிகேதன் அறக்கட்டளையில் வசித்து வரும் அவரது வாழ்க்கை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. மூளை பாதிப்புள்ள ஏஞ்சலை அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர்.

அமெரிக்க தம்பதிகளான மேத்யூவும் ரேச்சலும் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மேத்யூ ஒரு மென்பொருள் பொறியாளர், ரேச்சல் ஓர் உளவியல் ஆலோசகர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தங்களின் புதிய மகளுக்கு ஏஞ்சல் மார்கெரி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஏஞ்சலை முதன் முதலில் கண்டறிந்தபோது, அவள் மீது தழும்புகள் மற்றும் தீக்காயங்கள் இருந்துள்ளது. அவளின் சில நடத்தைகள் இயல்புக்கு மாறானதாக இருந்தது. அப்போது நாரி நிகேதன் அறக்கட்டளையின் செவிலியர் உடனே அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதனைக்குப் பிறகு அவளை வெண்ணீரால் சுட்டிருப்பது தெரிய வந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு நியூரான்கள் வளராமல் இருப்பதால் மனநல கோளாறு இருப்பதும் உறுதியானது.

தற்போது பாஸ்போர்ட் பணிகள் முடிவடைவதற்காக ஏஞ்சல் காத்திருக்கிறார். பாஸ்போர்ட் வந்துவிட்டால் உடனே அமெரிக்காவிற்கு பறந்து சென்று விடுவார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)