You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூயஸ் கால்வாய்: உலக வர்த்தகத்திற்கு இந்த நீர்வழி எவ்வளவு முக்கியமானது? – காணொளி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் போரின் விளைவுகள் காஸா பகுதிக்கு அப்பாலும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கின்றன.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் பெரும் மோதல் வெடித்தது.
கடந்த சில வாரங்களாக, செங்கடல் பகுதி இந்த மோதலின் நீட்சியாக மாறியுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் செங்கடலின் வாயிலில் இருக்கும் யேமனைக் கட்டுப்படுத்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் முயன்றுவருகிறார்கள்.
தற்போது அவர்கள் சூயஸ் கால்வாய் வழியாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவி தாக்கத்துவங்கியுள்ளனர்.
ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் கப்பல்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் எண்ணெய் உலகின் பெரும் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP), மற்றும் உலகின் பெரும் கப்பல் நிறுவனங்களான மத்தியத் தரைக்கடல் கப்பல் நிறுவனம், மேர்ஸ்க் உள்ளிட்ட ஐந்து பெரிய நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியே கப்பல்களை இயக்குவதை தற்போதைக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
தங்கள் பணியாளர்கள், கப்பல்கள் மற்றும் சரக்குகளைப் பாதுகாக்க மிக நீளமான மாற்று வழியைப் பயன்படுத்தும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
இது உலக வர்த்தகத்தை மிகப்பெரும் அளவில் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏன்?
இந்த தகவல்கள் உங்களுக்கு விளக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)