அகிரா தோரியாமா: டிராகன் பால் கதையை உருவாக்கியது எப்படி?
காமிக்ஸ் உலகில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வரும், உலக அளவில் பிரபலமான ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்களில் ஒன்றான ட்ராகன் பால் மாங்காவை உருவாக்கிய அகிரா தோரியாமா தனது 68வது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஒருவகையான மூளை ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது. டிராகன் பால் காமிக்ஸ் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது.
மேலும் இது, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் வழியாக அனிமேஷன் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. டிராகன் பாலின் முதல் அச்சிடப்பட்ட தொடர் 1984இல் வெளியிடப்பட்டது. இது சயான்கள் எனப்படும் வேற்றுலகவாசிகளிடம் இருந்து பூமியைப் பாதுகாக்க மாயாஜால சக்தியை தேடும் சான் கோகு என்ற சிறுவனின் சாகசங்களைப் பற்றிய கதை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



