You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரிய ஒளி மூலம் அற்புதமான ஓவியங்களை உருவாக்கும் இலங்கைத் தமிழர்
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர், 26 வயதான சிவநேசராசா லிங்கேஸ்வரன்.
ஒரு பூத கண்ணாடியால் சூரிய ஒளியைக் குவித்து, அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை கொண்டு மரப்பலகையில் ஓவியம் வரைகிறார் இவர்.
“சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது எனக்கு அதிக நாட்டம். சூரிய ஒளி மூலமாக ஓவியங்களை உருவாக்கும் தமிழ்நாட்டின் கலைஞர் விக்னேஷைப் பார்த்து, நான் இதைச் செய்யத் தொடங்கினேன். இந்த மாதிரியான ஓவியம் வரைவதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம், அதுவும் சீரான சூரிய ஒளி.
ஒரு ஓவியத்தை முடிக்க 5 அல்லது 6 நாட்கள் ஆகும். சீரான சூரிய ஒளி இல்லையென்றால் மேலும் அதிக நாட்கள் ஆகும். எதிர்காலத்தில் இந்தக் கலையை பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று எண்ணுகிறேன்” என்று கூறுகிறார் சிவநேசராசா லிங்கேஸ்வரன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)