பால் சுரக்காத தாய்மார்கள்: குழந்தைகளுக்கு தாயாக விளங்கும் தாய்ப்பால் வங்கி

காணொளிக் குறிப்பு, பால் சுரக்காத தாய்மார்கள்: குழந்தைகளுக்கு தாயாக விளங்கும் தாய்ப்பால் வங்கி
பால் சுரக்காத தாய்மார்கள்: குழந்தைகளுக்கு தாயாக விளங்கும் தாய்ப்பால் வங்கி
பிரசுரிக்கப்பட்டது

பால் சுரக்காததால் தங்களின் குழந்தைகளின் பசியை போக்க முடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்கு உற்ற துணையாக விளங்கி வருகிறது எழும்பூர் தாய்ப்பால் வங்கி

இதுபோன்ற நூற்றுக்கணக்கான பால் சுரக்காத தாய்மார்கள் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலமாக தாய்ப்பாலை தானமாக பெற்று குழந்தைகளைத் தேற்றுகிறார்கள்..

எடை குறைந்த குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட குழந்தைகள், முற்றிலுமாக தாய்ப்பால் சுரக்காத தாயின் குழந்தைகள் என பலருக்கும் இங்குள்ள வங்கி மூலமாக பால் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது.

இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு மாதத்தில் சுமார் 60 லிட்டர் வரை பால் சேகரிக்கப்படுகிறது. ஒர் ஆண்டில் குறைந்தபட்சம் 600 தாய்மார்கள் தாய்பால் தானம் கொடுக்கிறார்கள். சுமார் 400 முதல் 500 குழந்தைகள்வரை தானம் பெற்ற தாய்ப்பாலை கொண்டு காப்பாற்றப்படுகிறார்கள். (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: நிஷாந்த் சாமுவேல்

தாய்ப்பால் வங்கி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: