விஜய் 2026 தேர்தலுக்கு குறி வைக்கிறாரா? எம்.ஜி.ஆர் வழியில் சாதிக்க நினைக்கிறாரா?

காணொளிக் குறிப்பு, விஜய் 2026 தேர்தலுக்கு குறி வைக்கிறாரா? எம்.ஜி.ஆர் வழியில் சாதிக்க நினைக்கிறாரா?
விஜய் 2026 தேர்தலுக்கு குறி வைக்கிறாரா? எம்.ஜி.ஆர் வழியில் சாதிக்க நினைக்கிறாரா?
பிரசுரிக்கப்பட்டது

` நடிகர் விஜய் தனது படத்தில் ஒரு ஓட்டைப் பற்றி எவ்வளவு ஆழமாக சொல்ல முடியும் அப்படி சொல்லியிருப்பார்.

என் மனதில் அது ஆழமாக பதிந்துள்ளது. அடுத்த ஆண்டு நான் போடப்போகும் ஓட்டுக்கு மதிப்பு உள்ளது என்பதை புரிந்துகொண்டேன். அதற்கு அண்ணா (அரசியலுக்கு) வரவேண்டும்.

நடிகர் விஜய்

அந்த ஏரியா, இந்த ஏரியா , எந்த ஏரியாவாக இருந்தாலும் நீங்கள் கில்லியாக இருக்க வேண்டும்` என்று நேற்றைய தினம் நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களை சந்தித்த நிகழ்ச்சியில் ஒரு மாணவி மேடையிலேயே பேசினார்.

இதற்கு வழக்கம்போல் தனது புன்முறுவலை மட்டுமே விஜய் பதிலாக வெளிப்படுத்தினார். நடிகர் விஜயின் சமீபத்திய செயல்பாடுகள் அவர் தீவிர அரசியலை நோக்கி முன்னேறுவதற்கான சமிக்ஞைகளாக பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: