வாசனை திரவிய உற்பத்திக்குப் பின் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் வலிமிகுந்த வாழ்க்கை

வாசனை திரவிய உற்பத்திக்குப் பின் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் வலிமிகுந்த வாழ்க்கை
பிரசுரிக்கப்பட்டது

அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் மூலப் பொருட்களைச் சேகரிக்கும் பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

லான்கோம் (Lancôme) மற்றும் ஏரின் பியூட்டி (Aerin Beauty) ஆகிய பிரபல அழகு சாதன பிராண்டுகளுக்கு, வாசனை திரவியம் தயாரிப்பதற்காகக் கடந்த கோடை காலத்தில் சப்ளையர்களால் வழங்கப்பட்ட மல்லிகைப் பூக்கள் குழந்தைத் தொழிலாளர்கள் மூலம் பறிக்கப்பட்டவை என பிபிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அனைத்து ஆடம்பர வாசனை திரவிய பிராண்டுகளும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை கடுமையாக எதிர்ப்பதாக கூறி வருகின்றன.

லான்கோம் நிறுவனத்தின் உரிமையாளரான லோரியல் (L'Oréal) நிறுவனம், மனித உரிமைகளை மதிப்பதில் தங்களது நிறுவனம் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது. ஏரின் பியூட்டி நிறுவனத்தின் உரிமையாளரான (Estée Lauder) எஸ்டீ லாடர், தனது சப்ளையர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக கூறியுள்ளது.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)