இலங்கை அரசியல்வாதி மீது அருவருப்பான பாலியல் புகார் - என்ன நடந்தது? - காணொளி
இலங்கை அரசியல்வாதி மீது அருவருப்பான பாலியல் புகார் - என்ன நடந்தது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
நாய் ஒன்றை இலங்கை அரசியல்வாதி ஆஷு மாரசிங்க பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் மீது குற்றம் சாட்டிய ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார்.
நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆஷு மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தார்.

ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தனா ஆகிய இருவரும் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட செய்தியாளர் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து விலகினார். விரிவான தகவல் இந்த காணொளியில்...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



