சென்னை விமான சாகசம்: பணயக் கைதிகளை மீட்பது எப்படி எனச் செய்துகாட்டிய விமானப் படை

காணொளிக் குறிப்பு,
சென்னை விமான சாகசம்: பணயக் கைதிகளை மீட்பது எப்படி எனச் செய்துகாட்டிய விமானப் படை
பிரசுரிக்கப்பட்டது

இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று (அக். 06), ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகல் 11 மணி முதல் ஒரு மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில், பணயக் கைதிகளை மீட்பது குறித்து ஒத்திகையை விமானப் படையினர் செய்துகாட்டினர்.

இந்திய விமானப் படையின் பல்வேறு விமானங்கள் மூலம் பலவிதமான வான் சாகச நிகழ்ச்சிகள் இதில் நிகழ்த்தப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)