ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா?

ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட் ரோன் ஏவப்பட்டதாக அவரது செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு அப்போது வீட்டில் இல்லை என்றும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்

முன்னதாக கசாவை நோக்கி மூன்று ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டதாகவும் ஒன்று கட்டடம் ஒன்றை தாக்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் அது பிரதமரின் குடியிருப்பு வளாகமா என்பதை குறிப்பிடவில்லை.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கலாம் என சர்வதேச நாடுகள் நம்பும் நிலையில் பாலத்தீனியர்களிடம் அந்த நம்பிக்கை காணப்படவில்லை

அவர்கள் போர் தொடரும் என்றே நம்புகின்றனர்.

காசாவில் ஒரு நம்பகமான சுயாதீன பத்திரிகையாளர் பிபிசிக்காக சில பாலத்தீனியர்களிடம் பேசினார். பொதுவாக இஸ்ரேல் பிபிசியை காசாவிற்குள் அனுமதிப்பதில்லை. அரிதான நிகழ்வுகளில் அதுவும் ராணுவத்தின் மேற்பார்வையுடனே காசாவிற்குள் அனுமதிக்கிறது.

இந்த போர் சின்வாரையோ, ஹனியேவையோ அல்லது மிஷாலையோ சார்ந்தது அல்ல. எந்த ஒரு தலைவரையோ அல்லது எந்த ஒரு அதிகாரியையோ சார்ந்ததும் அல்ல என ரமடான் ஃபரிஸ் தெரிவித்தார்

இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கு முழுவதும் வேண்டும். இஸ்ரேல் லெபனானில் சண்டையிடுகிறது, சிரியாவில் சண்டையிடுகிறது, ஏமனில் சண்டையிடுகிறது என அட்னான் அஷோர் தெரிவித்தார்

ஹமாஸின் மூத்த உறுப்பினர் கலில் அல் – ஹய் சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்தார்

அவர் வெளியிட்ட வீடியோவில் சின்வார் போரில் உயிரிழந்ததாக தெரிவித்தார்

சின்வாரின் இறப்பு ஹமாஸ் குழுவை மேலும் வலுவடைய செய்யும் என அதன் துணை தலைவரான கலில் அல் ஹய் தெரிவித்தார்

மேலும் பாலத்தீனியர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் பாதையில் ஹமாஸ் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

காசாவில் ஒடுக்குமுறை நிறுத்தப்பட்டு இஸ்ரேலிய படைகள் முழுவதுமாக வெளியேறும் வரை இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்

சின்வாருக்கு பிறகு அல் ஹய் ஹமாஸின் மூத்த தலைவராக உள்ளார்

சின்வார் கொல்லப்பட்டது காசாவில் போர் நிறுத்தத்திற்கான வழி வகுக்கும் என பிரிட்டன் அமெரிக்க மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் நம்புகின்றன.

இருப்பினும் பாலத்தீனியர்களை போலவே இந்த போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என்று தெரிவித்த ஜோ பைடன் இருப்பினும் லெபனானில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என அவர் தெரிவித்தார்

சின்வார் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ், ஹெஸ்பொலா, இரான் ஆகிய மூன்று தரப்பும் பாலத்தீனம் விடுதலை அடையும்வரை போர் முடிவுக்கு வராது என எச்சரித்துள்ளன

இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி ஹமாஸின் தலைவர் யாய்யா சின்வார் கொல்லப்பட்ட பிறகும் ஹமாஸ் உயிர்ப்புடன் உள்ளது அது எப்பதும் அப்படியே இருக்கும் என்றும் தெரிவித்தார்

கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலின் முக்கிய பின்புலனாக இருந்தவர் சின்வார்

ஹமாஸ் தனது முக்கிய தலைவரை இழந்தாலும் முன்னேறி செல்வதை நிறுத்தாது அது என்று தெரிவித்தார்

ஹமாஸ், ஹெஸ்பொல்லா இரண்டு குழுக்களுமே இரான் ஆதரவு பெற்ற குழுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மறுபுறம் பணயக்கைதிகள் மீட்கப்படும் வரை இஸ்ரேல் தொடர்ந்து போரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

பணயக்கைதிகளை மீட்டால் மட்டுமே எங்களின் இலக்கு நிறைவடையும். அது மட்டுமே போரின் முடிவுக்கு கொண்டு செல்லும் என அவர் தெரிவித்தார்.

ஆனால் ஹமாஸின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் சின்வார் கொல்லப்பட்ட இந்த தருணத்தில் போர் நிறுத்தம் குறித்தான பேச்சுவார்த்தையை தொடங்கி தங்களின் அன்புக்குரியவரைகளை மீட்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நெதன்யாகு இந்த தருணத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

காசாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கிய பிறகு குறைந்தது 42 ஆயிரத்து 519 பேர் கொல்லப்பட்டதாகவும், 99,637 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸால் இயக்கப்படும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 91 பேர் காயமடைந்தனர் என்று இயக்கப்படும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் லெபனானில் தாக்குல்கள் தொடர்ந்து வருகிறது. சுமார் 60 ஹெஸ்பொலா உறுப்பினர்களை கொன்றதாகவும் அவர்களின் கமாண்ட் செனடரை அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பகுதிகள் மற்றும் ஹைய்ஃபா நகரில் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது

முழு விவரம் காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)