காணொளி: ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் புதிய எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
2021-இல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன் அங்கு ஆட்சிக்கு வந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள பக்ராம் விமானத் தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரி வருகிறது. பக்ராமை திரும்ப பெற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மறுக்கிறீர்களா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
"அதைப் பற்றி நாங்கள் பேசமாட்டோம். ஆனால் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். அதை (பக்ராம் விமான தளம்) உடனே திரும்பப் பெற விரும்புகிறோம். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அறிவீர்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



