You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா- யுக்ரேன் கனிம ஒப்பந்தம் கைவிடப்பட்டதா? செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியது என்ன?
யுக்ரேனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 4) செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்த நாடு கடினமான சூழ்நிலைகளிலும் அவர்களுடன் (யுக்ரேன்) ஒட்டிக்கொண்டிருப்பதால் அவர் (ஸெலன்ஸ்கி) இன்னும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஐரோப்பாவை விட நாம் அவர்களுக்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம். ஐரோப்பா நம்மை விட அதிகமாகக் கொடுத்திருக்க வேண்டும், ஏனென்றால், எல்லை அங்கேதான் உள்ளது." என்று கூறினார்.
யுக்ரேன் கனிம ஒப்பந்தம் தற்போது கைவிடப்பட்டதா அல்லது மீண்டும் உயிர்பெறுமா? செய்தியாளர்கள் கேட்டபோது, "உங்களுக்கு தெரியப்படுத்துவேன். பேசிக்கொண்டிருக்கிறோம். நாளை இரவு நீங்கள் அதைப் பற்றி அறிந்துகொள்வீர்கள். எனவே, நாளை இரவு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)