இஸ்ரேலுடன் மோதும் 'ஹெஸ்பொலா' இயக்கத்தின் வலிமை என்ன?

இஸ்ரேலுடன் மோதும் 'ஹெஸ்பொலா' இயக்கத்தின் வலிமை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த அக்டோபர் முதல் இஸ்ரேல் மற்றும் இரானின் ஆதரவுப்பெற்ற ஹெஸ்பொலா (Hezbollah) அமைப்பு இடையே நிகழ்ந்து வரும் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலேன் ஹைட்ஸ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இது ஒரு முழுமையான மோதலாக மாறக்கூடுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை கொடுக்காத விலையை ஹெஸ்பொலா கொடுக்கும் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது. மேலும் லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களையும் தொடுத்தது. மறுப்புறம், கோலன் ஹைட்ஸ் பகுதியில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இல்லை என ஹெஸ்பொலா கூறியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக இரு தரப்புக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டடுள்ளதா? அவ்வாறு போர் நிகழ்ந்தால் பாதிப்பு யாருக்கு? இஸ்ரேலை எதிர்க்கும் அளவுக்கு ஹெஸ்பொலா அமைப்பு வலிமையானதா? இந்த காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)