இந்தியா-கனடா பதற்றம்: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

இந்தியா-கனடா பதற்றம்: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த பதற்றத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை, அமெரிக்காவின் அணுகுமுறை தொடர்பாக வந்துள்ளது.

ஏனெனில் அது கனடாவின் அண்டை நாடு மற்றும் முக்கிய நட்பு நாடு என்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுடனான அதன் உறவுகளும் வலுவடைந்து வருகின்றன.

திங்களன்று ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அமெரிக்கா இதுகுறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தின் வேர்வரை சென்று குற்றவாளிகளைத் தண்டிக்குமாறும் அது கூறியது.

​​"கனடாவின் பிரதமர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் கனடாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)