You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனு - சரப்ஜோத் ஜோடியை முந்தி வெள்ளி வென்ற இந்த துருக்கி வீரரை ரசிகர்கள் வியந்து பார்ப்பது ஏன்?
யூசுஃப் டிகெக். அண்மை நாட்களில் இந்தப் பெயரை அதிகம் கேட்டிருப்பீர்கள்.
கண்களில் லென்ஸோ, நவீன கண்ணாடியோ இல்லை. காதை பாதுகாப்பதற்கான கருவியும் அணியவில்லை. சாதாரணமாக பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டே பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை தட்டித் தூக்கியிருக்கிறார்.
இந்தியாவின் மனுவும் சரப்ஜோத் சிங்கும் வெண்கலப் பதக்கத்தை வென்ற அதே போட்டியில், துருக்கியின் யூசுஃப் மற்றும் செவ்வால் இல்யாடா தர்ஹான் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. யூசுஃப் டிகெக்கு 51 வயதாகிறது.
வெற்றி என்பது பாக்கெட்டில் கைகளை வெறுமனே வைத்துக் கொண்டிருப்பதால் கிடைப்பதல்ல என்பது யூசுஃப் டிகெக்கின் தத்துவம் என ஒலிம்பிக் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யூசுஃப் டிகெக்கு ஐந்தாவது ஒலிம்பிக்.
எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் 'கேஷுவலாக' நின்று இவர் துப்பாக்கிச் சுடும் புகைப்படமும் காணொளியும் சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)