இஸ்ரேல் vs பாலத்தீனம்: காஸாவைத் தொடர்ந்து மேற்கு கரையிலும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
மேற்கு கரையின் ஜெனின் பகுதியில் ஞாயிறுக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. அல் அன்சார் மசூதி மீதும் இஸ்ரேலிய படையினர் தாக்குதலை தொடுத்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் அன்சார் மசூதி திகழ்ந்ததாகவும் ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த சிலரும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவினரும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட இருந்ததால், அதனை முறியடிக்கும் விதமாக தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவிக்கிறது. இந்த தாக்குதலால் கட்டடங்கள் தரைமட்டமாகின.
இதேபோல் காஸா மீது இரவோடு இரவாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் துணை கமாண்டர் உள்பட பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 55க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் கூறுகிறது.
காஸா மீதான வான்வழித் தாக்குதளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், வடக்குப் பகுதியை இன்னமும் காலி செய்யாமல் உள்ள பாலத்தீனர்கள் உடனடியாக தெற்குப் பகுதியை நோக்கி செல்லுமாறு மீண்டும் எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



