நிலாவில் மோதி நொறுங்கிய லூனா 25 - என்ன நடந்தது? முழு விவரம்
நிலாவில் மோதி நொறுங்கிய லூனா 25 - என்ன நடந்தது? முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சுழன்று நிலாவில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லூனா-25 நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்க இருந்தது. ஆனால், அது நடப்பதற்கு முன்பாக சுற்றுப்பாதையில் நகர்ந்துகொண்டிருந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதாக நேற்று ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது விண்கலம் நிலாவில் மோதியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ். கடந்த 50 ஆண்டுகளில் ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவுப் பயணம் இது.
உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கூறுகள் நிலாவில் உள்ளதாகக் கருதும் விஞ்ஞானிகள், அதன் ஒரு பகுதியை ஆராய இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



